தென்தமிழகத்திலும், வடதமிழகத்திலும் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் கூறுகையில்,நேற்று இலங்கை ஒட்டியுள்ள நேற்று இலங்கை ஒட்டியுள்ள பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது குமரி கடல் பகுதிக்கு நகர்ந்து அங்கு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.
இது அடுத்து வரும் 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும் . அதனைத் தொடர்ந்து அடுத்து வரக்கூடிய 24 மணி நேரத்தில் அதாவது அக்டோபர் 31-ஆம் தேதி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் .
அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும் வடதமிழகத்தில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். கானமழை பொருத்தவரையில் தென் தமிழக மாவட்டங்கள் குமரி ,நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களிலும்,வட தமிழக மாவட்டங்களில் கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி ,தர்மபுரி, இந்த மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தவரையில் மீனவர்கள் மன்னார் வளைகுடா தென் தமிழகப் பகுதிகள் குமரி கடல் பகுதியில் மாலத்தீவுகளில் லட்சத் தீவு பகுதிகளுக்கு 29, 30, 31 தேதிகளில் செல்ல வேண்டாம் என்று தெரிவித்தார்.
கஜகஸ்தான்: கஜகஸ்தானில் 72 பயணிகளுடன் சென்ற விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியது. இதில், பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அஜர்பைஜான்…
ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நள்ளிரவில் நடத்திய வான்வழி தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். ஏற்கெனவே…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் பேத்தியும், அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் மகளுமான சங்கமித்ரா அன்புமணி ,…
சென்னை: இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் சூர்யா இணைந்துள்ள படம் மீது பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளது. படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை…
டெல்லி : இன்று மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து பேசுகையில், அம்பேத்கர் குறித்து…