தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு.!

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய இடஙகலில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வடதமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலிலும் மழைபெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மாயம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் மாலையில் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.
கேரளா மற்றும் லட்சத்தீவு பகுதியில் சூறாவளி காற்று வீசலாம் என்பதால் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.