தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை-சென்னை வானிலை மையம்
தென்மேற்கு பருவமழை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்து வருகிறது. நேற்று கூட சென்னையில் காலையில் வாட்டிவதைத்த வெயில் மாலை 4 மணி முதல் நல்ல கனமழை பெய்தது.இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தமிழகம் முழுவதும் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைத்துள்ளனர் .இதனைத்தொடர்ந்து அடுத்த இரு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நல்ல மழை பெய்யும் எனவும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது .