தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை…!சீரமைப்பு பணிகளில் பின்னடைவு…!
தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
நாகை மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்ய தொடங்கியுள்ளது.திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டாரங்களில் மழை பெய்து வருகிறது. கடலூர் மாவட்டம் திண்டிவனம், மைலம், கூட்ரேப்பட்டு, செண்டூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது..தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை சேதுபாவாசமுத்திரம் கனமழை பெய்து வருகிறது.
மழை பெய்து வருவதால் மின் சீரமைப்பு மற்றும் மரங்கள் அகற்றும் பணிகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.