4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், கடந்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை மிதமாக பெய்துள்ளது,ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது .குமரி, நெல்லை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தவரையில் மீனவர்கள் கேரளா, கர்நாடகா மற்றும் மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளுக்கு மணிக்கு 45 முதல் 55 வரை சூறைகாற்று வீசுவதால் 19,20, 21, ஆகிய தேதிகளில் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.