#Breaking:மகிழ்ச்சி…தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை- வானிலை மையம் அறிவிப்பு!
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்னும் கத்தரி வெயில் இன்று முதல் தொடங்கியுள்ள நிலையில்,பல்வேறு இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவாகி உள்ளது.இதனால்,மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில்,வங்கக்கடலில் அந்தமான் பகுதியில் வருகின்ற வெள்ளிக்கிழமை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்பதன் காரணமாக,தமிழகத்தில் நாளையும்,நாளை மறுநாளும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி,நாளை நீலகிரி,கோவை,திருப்பூர்,கிருஷ்ணகிரி,ஈரோடு, தருமபுரி,சேலம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் கணித்துள்ளது. அதைப்போல,நாளை மறுநாள் நீலகிரி,கோவை,திருப்பூர்,தேனி, திண்டுக்கல்,கரூர்,நாமக்கல்,திருச்சி,ஈரோடு,கிருஷ்ணகிரி,தருமபுரி, சேலம் ஆகிய 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதனால்,தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் சற்று குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே,தமிழகத்தில் இன்றைய தினம் 30 முதல் 40 கிமீ வேகத்தில் தரைக்காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
04.05.2022 தேதியிலிருந்து தமிழகத்தின் அடுத்த ஐந்து நாட்களுக்குகான வானிலை முன்னறிவிப்பு pic.twitter.com/R0q6XeOnpx
— TN SDMA (@tnsdma) May 4, 2022