#RainAlert: ”6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு” – வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் நிலவும் காற்றின் திசைவேக மாறுபாட்டு காரணமாக 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
அந்த வகையில், புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய 6மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:
மேலும், சென்னை மற்றும் புறநகர பகுதியில் இடியுடன் கூடிய மிதமான முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வறண்ட காற்று வீசும்:
அதேநேரத்தில், தமிழகத்தில் நாளை முதல் படிப்படியாக மழை குறைய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. வரும் நாட்களில் வறண்ட காற்று வீசும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.