#RainAlert:தமிழகத்தில் இன்றும் கனமழை தொடரும் – வானிலை ஆய்வு மையம்!
கோடை வெயிலால் தவிக்கும் மக்களுக்கு குளுமை அளிக்க கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில்,தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் இன்றும் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதே சமயம்,தமிழகம்,புதுச்சேரி,காரைக்காளின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும்,தமிழகத்தில் நாளை முதல் நான்கு நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
16.04.2022 தேதியிலிருந்து தமிழகத்தின் அடுத்த ஐந்து நாட்களுக்குகான வானிலை முன்னறிவிப்பு pic.twitter.com/k1bDlW5y4t
— TN SDMA (@tnsdma) April 16, 2022