#RainAlert:தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை – வானிலை மையம் எச்சரிக்கை!
கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில்,கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகின்றது.
இந்நிலையில்,தென் தமிழக மாவட்டங்கள்,மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அதே சமயம்,தமிழகத்தில் நாளை முதல் 4 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.