அடுத்த 2 மணி நேரத்திற்கு 24 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும்.!

வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது.

tn nigt rains

சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக,  தற்போது தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.  அதன்படி, கடந்த 12 மணிநேரத்தில் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் டெல்டா  பகுதிகள் என பரவலாக மழை பெய்துள்ளது.

இந்நிலையில், இன்று இரவு 7 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சி, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, சேலம், கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய ஆகிய 24 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணிநேரத்தில் கன்னியகுமாரி திருநெல்வேலி, தூத்துக்குடி தென்காசி உள்ளிட்ட ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live dharmendra pradhan
Cancer
delhi capitals kl rahul
anbil mahesh dharmendra pradhan
elon musk airtel
rain news tn
BLA