24 மணிநேரத்தில் மழை பெய்ய தொடங்கி படிப்படியாக அதிகரிக்கும்.! வானிலை ஆய்வு மையம் தகவல்.!
அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுசேரியில் மிதமான மழை இருக்கும் . அந்த மிதமான மழை படிப்படியாக அதிகரிக்கும் – வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் விளக்கம்.
வடகிழக்கு பருவமழை குறித்து தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு வானிலை தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
அதில், தென்மேற்கு பருவமழை முடிந்து வடகிழக்கு பருவமழை அக்டோபர் 29ஆம் தேதி முதல் தமிழகம் மற்றும் புதுசேரியில் தொடங்கும். அக்டோபர் 29 தொடங்கும் இந்த பருவமழை நவம்பர் 4ஆம் தேதி வரையில் தமிழகம் மற்றும் புதுசேரியில் இருக்கும் எனவும்,
அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுசேரியில் மிதமான மழை இருக்கும் . அந்த மிதமான மழை படிப்படியாக அதிகரிக்கும் எனவும், தெரிவித்தார். மேலும், அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் இல்லை எனவும் வானிலை தென் மண்டலா தலைவர் குறிப்பிட்டார் .
கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் வடகிழக்கு பருவமழை மற்றும் தென் மேற்கு பருவமழைக்கு இடையே 20 நாட்கள் இடைவெளி இருக்கும். ஆனால் தற்போது அந்த இடைவெளி குறைந்துவிட்டது என குறிப்பிட்டார். வானிலை தென்மண்டல தலைவர் பாலச்சந்தர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டு பேசினார்.