25 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை தொடரும் -வானிலை ஆய்வு மையம்..!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது கடந்த அக்டோபர் மாதம் முதல் பெய்து வருகிறது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை தற்போது வரையில் தமிழகத்தில் பெய்து வந்த நிலையில், தற்போது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, மேலும், தமிழகத்தில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னை உட்பட 25 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தற்போது கன மழை பெய்து வருகிறது.
சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்கள் கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை போன்ற டெல்டா மாவட்டங்கள் சேலம், விருதுநகர், ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டி உள்ள மாவட்டங்கள் என மொத்தம் 25 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு அதாவது இரவு 10 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.