தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை தொடரும்.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தகவல்.
தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 5 நாட்களுக்கு வரும் 21ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்றும், நாளையும் ஆந்திரா கடலோர பகுதிகள், மத்திய மேற்கு வாங்க கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கி சென்னை வரை பரவலாக மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) March 17, 2023