மாலை வரை சென்னையில் மழை நீடிக்கும் – தமிழ்நாடு வெதர்மேன்

மாலை வரை சென்னையில் மழை நீடிக்கும் வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பருவமழை பெய்து வருகிற நிலையில், பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் விடிய விடிய மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
சென்னையில், சாலையில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும், சாலையில் வாகனம் ஓட்டுபவர்கள் கவனமாக ஓட்டுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மேலும் 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும், இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அவர்கள் இதுகுறித்து கூறுகையில், சென்னையில் இன்று மாலை வரை விட்டு விட்டு மழை பெய்யும் என தெரிவித்துள்ளார்.