32 மாவட்டங்களில் மழை பெய்யும் !ஆபத்தான இடங்களில் செல்ஃபி வேண்டாம் -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள்
இன்னும் 32 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிகம் இருந்து வருகிறது. இதன் காரணமாக மழையின் அளவும் அதிகரித்து உள்ளது.மேலும் கியார் மற்றும் மகா என்று இரண்டு புயல்கள் உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இதனையொட்டி வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,மகா மற்றும் கியார் புயல்களின் நகர்வுகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.மகா புயலால் தமிழகத்துக்கு பாதிப்பு இல்லை.மழையின் அளவை பொருத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.நீர்நிலைகளில் செல்ஃபி எடுப்பதை தவிர்க்க வேண்டும்.தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. இன்னும் 32 மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் தெரிவித்தார்.