தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை தொடரும்-வானிலை ஆய்வு மையம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை தொடரும்.
வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது . சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், 2 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.