தமிழகம்,கர்நாடகம் மற்றும் கேரளாவில் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

தமிழகம்,கர்நாடகம் மற்றும் கேரளாவில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்,தெலங்கானா, ஒடிசா, மத்திய பிரதேசம் மற்றும் சத்திஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் வட மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக கன மழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .கர்நாடகாவில் உள்ள கடலோர பகுதிகளில் அடுத்த 3 நாட்களுளுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
ஏற்கனவே கேரளா மற்றும் கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை பரவலாக மழை பெய்து வருகிறது .இதன் காரணமாக தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
உடனே வெளியேறுங்கள்.., 27ம் தேதி வரை தான் டைம்.! பாக். நாட்டினருக்கு விசா சேவை நிறுத்தம்.!
April 24, 2025
இந்தியா vs பாகிஸ்தான் : நதிநீர் நிறுத்தம், மருத்துவ சேவை நிறுத்தம்., பாக். வான்வழி தடை!
April 24, 2025