தமிழகத்தில் சில மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.!
வெப்பசலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் நீலகிரி, தேனி, கோவை, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆராய்ச்சி அமையம் தகவல்.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை சுற்றியுள்ள மாவட்டங்களில் தற்போதைய காலகட்டத்தில் மழை பெய்வது வழக்கம். இந்த கால கட்டத்தில் தான் வட மாவட்டங்களிலும் வெப்பச்சலனம் மற்றும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்ய வாய்ப்பு அதிகமாக இருக்கும். இம்மாதம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கோடை மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆராய்ச்சி அமையம் தகவல் தெரிவித்துள்ளது.
வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் நீலகிரி, தேனி, கோவை, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி அமையம் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் ஏரனியல் பகுதியில் அதிகபட்சமாக 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது. திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையில் 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது எனவும் வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்துள்ளது.