அடுத்த இரு தினங்களுக்கு பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் கூறுகையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதி மற்றும் தெற்கு இலங்கை அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.இது குமரி கடலை நோக்கி நகர்ந்து வலுப்பெறும்.வரும் 30,31 தேதிகளில் தென்கிழக்குஅரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு மாலத்தீவு பகுதிகளை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
இதனால் அடுத்த 2 தினங்களுக்கு தென் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கனமழையை பொறுத்தவரை கன்னியாகுமரி,நெல்லை தூத்துக்குடி,ராமநாதபுரம் சிவகங்கை,விருதுநகர் மதுரை,புதுக்கோட்டை மற்றும் திருவள்ளூர்,காஞ்சிபுரம் திருவண்ணாமல,விழுப்புரம்,வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். வரும் 28,29,30,31 ஆகிய தேதிகளில் மீனவர்கள் மன்னார் வளைகுடா,தென் தமிழகக் கடல் பகுதிகள்,குமரிகடல் பகுதி மாலத்தீவு,மற்றும் லட்ச தீவுப் பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் .
மணப்பாறை நடு காட்டுப்பட்டியில் மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அங்கு வானிலை நிலவரங்கள் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது, மணப்பாறை பொருத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை மட்டுமே வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது.
லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோவில்…
சென்னை : அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் சாம்சங் தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.…
சென்னை : நடிகர் ரவி மோகனுக்கும் அவரது மனைவி ஆர்த்தி ரவிக்கும் இடையிலான விவாகரத்து சண்டைக்கு மத்தியில், ரவி மோகன் பாடகி…
டெல்லி : ஆசியக் கோப்பையில் இருந்து இந்தியா விலகுவதாக வெளியான செய்திகளை பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். அடுத்த…
டெல்லி : பஹல்காமில் நமது மகள்களின் நெற்றிக் குங்குமத்தை அழித்தவர்களுக்கு, அவர்களின் சொந்த சகோதரியைக் கொண்டே பாடம் கற்பித்துள்ளோம் என…
சென்னை : மத்திய கிழக்கு அரபிக் கடலில் வரும் 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.…