தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை – வானிலை மையம் அறிவிப்பு

Default Image

அந்தமான் கடல் பகுதியில் வரும் 5-ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை மையம் அறிவிப்பு.

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபட்டால் தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்றும், நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.

டிசம்பர் 2 மற்றும் 3-ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதுபோன்று டிசம்பர் 4-ஆம் தேதி தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அடுத்த 2 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அந்தமான் கடல் பகுதியில் வரும் 5-ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்ககூடும் என்றும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்