ஆறு மாதங்களுக்கு பிறகு சென்னையில் மழை ! வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி
சென்னையின் பல இடங்களில் ஆறு மாதங்களுக்கு பிறகு பரவலாக மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கடும் வறட்சி நிலவி வருகிறது.இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது மழைக்காலங்களில் மழைநீரை சேமித்து வைக்காததுதான்.ஆம் அதுவும் ஒரு முக்கிய காரணியாக உள்ளது.மேலும் தமிழகத்தை வெளுத்து வாங்கிய அக்னி நட்சத்திரமும் ஒரு காரணம் ஆகும்.
சென்னை இன்று நீருக்கு சிரமப்படுவதை #தவிக்கும் _தமிழ்நாடு என்ற ஹேஷ்டேக் முலம் உலகமே உற்று நோக்கி அவலம் தமிழகத்திற்கு ஏற்பட்டது.
இந்நிலையில் சென்னையின் பல இடங்களில் ஆறு மாதங்களுக்கு பிறகு பரவலாக மழை பெய்து வருகிறது.திருப்போரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.மீனம்பாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, பூந்தமல்லி, நசரத்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது .வெயில் வாட்டி வதைத்த நிலையில் மழையால் வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.