15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை – வானிலை ஆய்வு மையம்..!
வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ‘மிதிலி’ புயலானது வடக்கு வடகிழக்கு திசை நகர்ந்து நேற்று பிற்பகல் வங்காளதேசம் கடற்கரை அருகில் கேப்புபாராவில் கரையை கடந்தது. தென்மேற்கு வங்ககடல் மற்றும் இலங்கைப் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.
அதன் படி சென்னை, செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.