அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழை!
தமிழகத்தில் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்துவரும் நிலையில், அடுத்ததாக அடுத்த 3 மணி நேரதிற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த மாதம் 1ம் தேதி வரைக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.