அடுத்த 2 மணி நேரத்திற்கு இந்த 3 மாவட்டத்திற்கு மழை பெய்யும்!

haryana rain

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, பல்வேறு மாவட்டங்களில் கடந்த 2 தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதேபோல், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 24 மணி நேரத்திற்கும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. வங்க கடலில் 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்