நாகர்கோவில்: தென்கிழக்கு மற்றும் கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் இருந்து குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை மேற்கு வடமேற்கு திசையில் மணிக்கு நகர்ந்துள்ளது. ஓமனில் இருந்து 1360 கி.மீ கிழக்கு தென் கிழக்கு திசையிலும், ஏமனில் இருந்து 1270 கி.மீ தூரத்தில் கிழக்கு தென் கிழக்கு திசையிலும், லட்சத்தீவு பகுதியில் இருந்து 920 கி.மீ மேற்கு வடமேற்கு திசையிலும் நிலை கொண்டிருந்த நிலையில் இது ‘லூபான்’ புயலாக மாறியுள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் வரும் 12ம் தேதி வரை ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது என்றும், மணிக்கு 80 கி.மீ வேகத்தில் பலத்த கடற்காற்று வீசும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தென் தமிழகம், கேரளா, லட்சத்தீவு, கர்நாடகா கடல் பகுதியில் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படும். கடலில் 3 முதல் 4 அடி உயரத்திற்கு ராட்சத அலைகள் காணப்படும். எனவே மீனவர்கள் தென் கிழக்கு அரபிக்கடல் கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதிகளில் 8ம் தேதி வரையும், மேற்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் 8ம் தேதி முதல் 12ம் தேதி வரையும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். தமிழகம் மற்றும் புதுச்சேரி, கேரளா, லட்சத்தீவு பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்யும். சாதாரணமாக காற்றின் வேகம் 40 முதல் 50 கி.மீ வேகத்தில் காணப்படும்.
மேற்கு மத்திய மற்றும் தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியிலும் மேற்கு மத்திய அரபிக்கடல் பகுதியிலும் 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை காற்றின் வேகம் 80 கி.மீ வேகத்தில் இருக்கும். கடற்கரை பகுதியில் இருந்து 1200 கி.மீ.க்கு அப்பால் புயல் உருவாகியுள்ளதால் கரையோர பகுதி மக்களுக்கு ஆபத்து நீங்கியுள்ளது. இதனை போன்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிக்கு இடையே புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுவதுடன் அடுத்த 72 மணி நேரத்தில் ஒடிசா நோக்கி நகரும்.
எனவே மீனவர்கள் வடக்கு அந்தமான், வடகிழக்கு மற்றும் கிழக்கு மத்திய வங்காள விரிகுடா பகுதியில் அடுத்த 24 மணி நேரத்திலும், மத்திய மற்றும் வடக்கு வங்காளவிரிகுடா பகுதியில் 8ம் தேதி முதல் 10ம் தேதி வரையும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். ஆழ்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருப்பவர்கள் உடனே கரை திரும்ப வேண்டும். வடக்கு அந்தமான் மற்றும் வடகிழக்கு மற்றும் கிழக்கு மத்திய வங்கா விரிகுடா பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றின் வேகம் 40 முதல் 50 கி. மீ வேகத்திலும், சில வேளையில் 60 கி.மீ வேகத்திலும் காணப்படும். இது 45 முதல் 55 கி.மீ வேகத்திலும், சில நேரங்களில் 65 கி.மீ வேகத்திலும் காற்று வீசும். வரும் 10ம் தேதி வரை இந்த நிலை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
DINASUVADU
திருச்சி : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் , தங்கள் கட்சி கூட்டணி பற்றிய கேள்விகள் குறித்தும், திமுக, பாஜக…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 4% கூடுதலாகப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது, குமரிக்கடல்…
சென்னை ;சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 18] எபிசோடில் மீனா மீது கரிசனம் காட்டுகிறார் விஜயா.. போட்டோசூட்டினால் வந்த பிரச்சனை…
சென்னை : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் என்பது வரும் நவ-24 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது.…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நேற்று விலகிய டெல்லி முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் தன்னை இணைத்து…
திருச்சி : நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாயச் சங்கங்கள் சார்பில்…