தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை – வானிலை மையம் தகவல்!

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்.
வெப்பச் சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் வரும் 28-ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். தமிழகத்தில் அதிகபட்சமாக கொடைக்கானலில் 8 செமீ, பிலவக்கல், ராஜபாளையத்தில் தலா 6 செமீ மழை பதிவாகியுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
மேலும், கோவை, திருப்பூர், விருதுநகர், மதுரை, திருப்பத்தூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
INDvsAUS : கடைசி நேரத்தில் தொடர்ச்சி விக்கெட்..திணறிய ஆஸ்..இந்தியாவுக்கு வைத்த இலக்கு!
March 4, 2025
ஆனந்த் அம்பானியின் வந்தாரா: வனவிலங்கு மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்து சிங்கக்குட்டிக்கு பாலூட்டிய மோடி.!
March 4, 2025