சென்னையில் நேற்றிரவு பல இடங்களில் மழை.!
- மாலத்தீவு மற்றும் அதை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என கூறப்பட்டு இருந்தது.
- இந்நிலையில் சென்னையில் பல இடங்களில் , திருவள்ளூர் மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் லேசான மழைபெய்தது.
மாலத்தீவு மற்றும் அதை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்நிலையில் சென்னையில் பல இடங்களில் பரவலாக நேற்றுஇரவு மழை பெய்தது. அதில் பெசன்ட்நகர், திருவான்மியூர், அண்ணாநகர், வடபழனி, கிண்டி, ஈக்காட்டுதாங்கள் , ராயப்பேட்டை, நுங்கம்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் லேசான மழைபெய்தது. வடகிழக்குப் பருவமழையைப் பொருத்தவரை சென்னையில் இயல்பான அளவைவிட 19 சதவீதம் குறைவாக மழை பெய்திருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.