தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது:
தென்மேற்குப் பருவமழை ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மாநிலப் பகுதிகளிலிருந்து இன்று முதல் விலக தொடங்குகிறது.
வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும்,கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது.
அடுத்த 48 மணி நேரத்தில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சேலம், நாமக்கல், தருமபுரி, ஈரோடு, நீலகிரி, தேனி, திண்டுக்கல், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைபெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.
கடலூர், நீலகிரி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் மேலும் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை பதிவாகக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைபெய்த விவரத்தையும் வெளியிட்டுள்ளது:
அதன் படி பொன்னமராவதி (புதுக்கோட்டை) 7 செ.மீ., மானாமதுரை (சிவகங்கை), இலுப்பூர் புளிப்பாட்டி (மதுரை), மணப்பாறை (திருச்சிராப்பள்ளி) தலா 6 செ.மீ., பரமக்குடி (ராமநாதபுரம்), சங்கரிதுர்க் (சேலம்), காரைக்கால், நாகப்பட்டினம், நெய்வேலி (கடலூர்) தலா 5 செ.மீ., திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை ), கொடுமுடி (ஈரோடு), அரவக்குறிச்சி (கரூர்) தலா 4 செ.மீ என்று பதிவாகியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது.…
சென்னை : போலி வாக்குகளை தடுக்க தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை பகுஜன் சமாஜ் கட்சி இடைத்தேர்தலில் போட்டியிடாது…
கோவை : நல்லட்டிபாளையம், மேட்டுபாவி, பனப்பட்டி பகுதி, கொத்தவாடி கள்ளக்குறிச்சி : 22KV குருபீடபுரம் 22KV மலைகொத்தளம் 22KV லட்சியம்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழக்தில் ஒரு சில தினங்களாக கனமழை…
சென்னை : இவர்களுக்குள் இப்படியா? என்கிற வகையில் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது என்றால் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடைய விவாகரத்து தான். 29…
மும்பை : இந்தியாவில் பல இடங்களில் சையத் முஷ்டாக் அலி டிராபி நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணியின் மூத்த…