மழை பாதிப்பு : தூத்துக்குடி-மைசூர் விரைவு ரயில் இடமாற்றம்!
தூத்துக்குடியில் பெய்து வரும் கனமழை காரணமாக ரயில்கள் மீளவிட்டான் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தூத்துக்குடி : மாவட்டத்தில் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், கனமழை காரணமாக தூத்துக்குடி ரயில்கள் மீளவிட்டான் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, மழை பாதிப்பு காரணமாக தூத்துக்குடியில் இருந்து புறப்பட வேண்டிய 4 ரயில்கள் மீளவிட்டான் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் எனவும், தூத்துக்குடி-மைசூரு விரைவு ரயில் (16235) மாலை 05.15க்கு மீளவிட்டானில் இருந்து புறப்படும் எனவும், அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை செல்லும் முத்துநகர் விரைவு ரயில்(12694) இரவு 08.25க்கு மீளவிட்டானில் இருந்து புறப்படும் என்றும், தூத்துக்குடி-பாலக்காடு விரைவு ரயில் (16791) இரவு 10 மணிக்கு மீளவிட்டானில் இருந்து புறப்படும் தூத்துக்குடி-மேட்டுப்பாளையம் விரைவு ரயில் (16766) இரவு 10.50 மணிக்கு மீளவிட்டானில் இருந்து புறப்படும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.