சென்னை மழை வெள்ள பாதிப்பு – நிவாரண பொருட்களை வழங்கிய முதல்வர்..!

MKstalin

மிக்ஜாம் புயலின் கோரத்தாண்டவத்தால் சென்னை முழுவதும் மழைநீரால் சூழப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான இடங்கள் தீவு போல காட்சியளிக்கிறது. மாநகராட்சி ஊழியர்கள் மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், சென்னை இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

இந்த நிலையில், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்டு, நிவாரண முகாமில் தங்க வைத்துள்ளனர். அங்கு மக்களுக்கு தேவையான உணவு மற்றும் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

தண்ணீரில் மூழ்கிய புத்தகங்கள்.! கண்ணீருடன் நாங்கள்… வேதனையில் எழுத்தாளர்.!

இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தரமணியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டு, அந்த பகுதி மக்களுக்கு அரிசி, பால், பிரெட், பாய் உள்ளிட்ட நிவாரண பொருட்களை  வழங்கினார். இதனை தொடர்ந்து மற்ற பகுதிகளிலும் நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார்.

முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மிக்ஜாம்’ புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள கடும்சேதங்களை சரிசெய்திட இடைக்கால நிவாரணமாக ரூபாய் 5,060 கோடி வழங்கிடக்கோரி  பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்