பல்வேறு மாவட்டங்களில் மழை..!இடி..மின்னல் முழக்கத்தோடு பொழிவு
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பொழிந்து வருகிறது.
கோடைவெயில் வாட்டி வந்த நிலையில் மதுரை மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அதிகாலை முதல் மழை பொழிந்தது.இதில் மதுரையில் அதிகாலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது.
அதே போல் தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி சுற்றுவட்டாரத்தில் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது.மேலும் விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூரில் இடி மின்னலுடன் கூடிய கனமழை அதிகாலை முதல் பெய்து வருகிறது குறிப்பிடத்தக்கது