திருச்சியில் மேகமூட்டத்துடன் வானம் இருந்த நிலையில் மழை!
திருச்சியில் மேகமூட்டத்துடன் வானம் இருந்த நிலையில் குளிர்ந்த காற்றுடன் மழை பெய்தது. தமிழகத்தில் வெயில் காலம் துவங்கிய நேரத்தில் வழக்கத்துக்கு மாறாக இந்திய கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி, அது காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தீவிரம் அடைந்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு நிலையால் டெல்டா உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நேற்றுமுன்தினம் முதல் தூறல் மழை பெய்து வருகிறது. நேற்றும் பெரும்பாலான இடங்களில் மழை பெய்கிறது.நேற்றுமுன்தினம் திருச்சியில் ஒரு சில இடங்களில் பலத்த காற்றுடன் மழை தூறல் விழுந்தது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.