ரயில் நிலைய கொள்ளை – 2 தனிப்படைகள் அமைப்பு

திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் கொள்ளை நடந்தது தொடர்பாக 2 தனிப்படைகள் அமைப்பு.
சென்னை திருவான்மியூர் பறக்கும் ரயில் ரயில் நிலையத்தில் டிக்கெட் விற்பனை மையத்தில் ரூ.1.32 லட்சம் இன்று காலை கொள்ளை அடிக்கப்பட்டது. கொள்ளை அடித்த மர்ம கும்பல் குறித்து ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தது. இந்த நிலையில், திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் கொள்ளை நடந்தது தொடர்பாக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
எழும்பூர் ரயில்வே டிஎஸ்பி ஸ்ரீகாந்த் தலைமையில் தனிப்படை அமைத்து திருவான்மியூர் ரயில் நிலைய காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. 2 தனிப்படையினர் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். ரயில்வே நிலையத்தில் சிசிடிவி கேமரா இல்லாததை பயன்படுத்தி கொள்ளையர்கள் கைவரிசை காட்டியிருக்கலாம் என திருவான்மியூர் ரயில் நிலைய காவல்துறை தெரிவித்துள்ளது.