ரெயில் நிலைய மேம்பாலம் வேண்டும்…..மக்கள் கோரிக்கை…!!

Default Image

புட்டிரெட்டிப்பட்டியில் உள்ள ரயில் நிலயத்தை கடந்து செல்ல மேம்பாலம் வேண்டுமென்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தருமபுரி மாவட்டத்தில் உள்ளது பாப்பிரெட்டிப்பட்டி. இங்கே இருக்கும் புட்டிரெட்டிப்பட்டியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக ரயில் நிலையம் செயல்பட்டு வருகின்றது.இந்த ரயில் நிலையம் வழியாக பயணிகள் ரயில் மற்றும் சரக்கு ரயில்கள் தொடர்ந்து இயங்கி வருகின்றன.

இந்நிலையில் அந்த ரெயில் வழித்தடத்தில் ஒரு சில நேரங்களில் நீண்ட நேரம் ரயில்கள் தொடர்ந்து நிற்பதால் பொதுமக்கள் பாதையை கடந்து செல்ல மிகப்பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.காலை நேரங்களில் மட்டும் பள்ளி, கல்லூரி, அலுவலகத்திற்கு செல்பவர்கள் மேம்பாலம் இல்லாததால் ஆபத்தான வழியை தொடர்ந்து பயன்படுத்தி பயணித்து வருகின்றனர்.இதையடுத்து பல்வேறு மக்களின் கோரிக்கையை ஏற்று உடனே மேம்பாலம் அல்லது தரைவழி பாலம் அமைக்க அந்த பகுதி மக்கள் கோரிக்கையை விடுத்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்