துரைமுருகன் வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.10.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சமீப காலமாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்ற வண்ணமே உள்ளது.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18 ஆம் தேதி மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.
நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் பறக்கும்படை சோதனை நடத்த சென்றனர்.ஆனால் முறையான ஆவணங்கள் இல்லாத காரணத்தால் அங்கே 4 மணி நேரமாக காத்திருந்தனர்.பின்னர் காட்பாடியில் உள்ள துரைமுருகனின் வீட்டில் சோதனை நடத்த வருமான வரித்துறை மற்றும் பறக்கும்படை மீண்டும் சென்றனர்.நேற்று அதிகாலை சரியாக 3 மணி அளவில் சோதனை நடத்த சென்றனர். துரைமுருகனின் கார் உள்ளிட்ட வாகனங்களிலும் சோதனை நடத்தினார்கள்.
அதேபோல் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரி, மற்றும் சிபிஎஸ்இ பள்ளியில் சோதனை நடத்தினார்கள்.சோதனைகுறித்து அதிகாரிகள் விளக்கம் ஏதும் அளிக்கவில்லை.பின்னர் பலமணி நேரத்திற்கு பின் சோதனை நிறைவு பெற்றதாக வருமான வரித்துறை தெரிவித்தது.
இதன் பின்னர் வருமானவரித்துறை விளக்கம் அளித்தது.அதில், துரைமுருகன் வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.10.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது என்றும் வேலூர் மாவட்ட தேர்தல் அதிகாரி அளித்த தகவலின் பேரில் சோதனை நடத்தப்பட்டது என்று என்று தெரிவித்தது.அதேபோல் துரைமுருகன் வீடு, அவரது மகனின் பள்ளி, கல்லூரியில் நடந்த சோதனை நிறைவுபெற்றது என்று வருமானவரித்துறை தெரிவித்தது.
தேர்தல் நேரத்தில் துரைமுருகனுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…