மணிப்பூரில் ராகுல் தடுத்து நிறுத்தம்… அரசியல் பழிவாங்கும் செயல் கண்டிக்கத்தக்கது…அமைச்சர் உதயநிதி.!

Rahul udhaynidhi

மணிப்பூரில் ராகுல் காந்தியை தடுத்து நிறுத்தியது கண்டிக்கத்தக்கது என அமைச்சர் உதயநிதி ட்வீட் செய்துள்ளார்.

மணிப்பூரில் கலவர சம்பவங்களைத் தொடர்ந்து காங்கிரஸ் முன்னாள் எம்.பி ராகுல் காந்தி 2 நாள் பயணமாக இன்று மணிப்பூரின் இம்பால் சென்றடைந்தார். அங்கிருந்து அவர் பாதுகாப்பு முகாம்களில் உள்ள மக்களை சந்தித்து பேசுவதற்காக சென்று கொண்டிருந்த போது, பிஷ்னுபூரில் ராகுலின் வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டது.

அதற்கு மேல் ராகுல் காந்தி செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. மேலும் ஹெலிகாப்டர் மூலம் ராகுல் காந்தி செல்வதற்கு அறிவுறுத்தப்பட்டதாக தகவல் வெளியானது. ராகுலுக்கு அனுமதி மறுக்கப்பட்டதைக்கண்டித்து காங்கிரஸ் சார்பில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. அமைச்சர் உதயநிதியும் இது குறித்து தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

அமைச்சர் உதயநிதி தனது டிவீட்டில், ராகுல் காந்தியை மணிப்பூர் போலீசார் தடுத்து நிறுத்தியது கண்டிக்கத்தக்கது. மணிப்பூர் விஷயத்தில் பிரதமர் மோடி அமைதி காக்கின்ற நிலையில், ராகுல் காந்தி மணிப்பூர் மக்களை சந்தித்து பேச முயற்சி செய்கிறார்.

தற்போதுள்ள சூழ்நிலையில் மணிப்பூரில் மீண்டும் அமைதியை கொண்டுவருவது தான் முக்கியம். எதிர்க்கட்சிகள் மீதான அரசியல் பழிவாங்கும் செயலைக் கண்டிப்பதாக உதயநிதி ஸ்டாலின் தனது டிவீட்டில் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்