ராகுல் காந்தி ஹெலிகாப்டரில் பறக்கும் படை சோதனை!

rahul gandhi

Election2024: காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை.

நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு பணப்பட்டுவாடா உள்ளிட்டவை தடுக்கும் வகையில் தேர்தல் பிறகும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பேருந்து நிலையில், சாலைகள் மற்றும் ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதில் முன்னாள் இந்நாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் வேட்பாளர்கள் உள்ளிட்ட அனைவரது வாகனங்களும் சோதனைக்கு உள்ளாக்கப்படுகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

நீலகிரி தொகுதி கூடலூரில் ராகுல் காந்தி ஹெலிகாப்பட்டரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.  மைசூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தேர்தல் பரப்புரைக்காக நீலகிரி வந்துள்ள ராகுல் காந்தி இன்று அந்த தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து பரப்புரை மேற்கொள்கிறார்.

இந்த சூழலில் ராகுல் காந்தி வருகையோட்டி உடனடியாக ஹெலிகாப்டர் தளத்துக்கு சென்ற பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதனால் சற்று பரபரப்பான சூழல் நிலவியது. எனவே, ராகுல் காந்தி நீலகிரியில் பரப்புரையை முடித்துவிட்டு கேரள மாநிலம் வயநாடு செல்கிறார் என கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்