ராகுல்காந்தியை தகுதி நீக்கம் செய்தது ஜனநாயக படுகொலை – வைகோ கடும் கண்டனம்
ராகுல்காந்தியை தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை என வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குஜராத்தில் உள்ள சூரத் மாவட்ட நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததையடுத்து, இன்று மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், ராகுல் காந்தியின் உறுப்பினர் பதவி நிராகரிக்கப்பட்டதையடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், ராகுல் காந்திக்கு ஆதரவாகவும், பாஜக மற்றும் மோடி அரசின் மீது கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
வைகோ கண்டனம்
அந்த வகையில், ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு, ஹிட்லர் முசோலினி இடி அமீன் போன்ற சர்வாதிகாரிகளின் கொடுங்கோல் ஆட்சியை பிரதமர் மோடி அரசு செய்து வருகிறது. தீர்ப்பை காரணம் காட்டி 24 மணி நேரத்தில் ராகுல்கந்தியை தகுதி நீக்கம் செய்தது பாஜகவின் ஆணவ அக்கிரமத்தை காட்டுகிறது, இது ஜனநாயக படுகொலை.
இதற்கெல்லாம் சேர்த்து நாட்டு மக்கள் மோடி அரசுக்கு தண்டனை கொடுப்பார்கள் என்று மதிமுக பொதுச்செயலாளரும் மூத்த மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ, பாஜக மற்றும் மோடி அரசின் மீது கண்டனங்களை தெரிவித்துள்ளார்.