மநீம தலைவருக்கு நன்றி தெரிவித்த ராகுல்காந்தி..!
மநீம தலைவர் கமலஹாசன் அவர்கள், ராகுல்காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார்.
டெல்லியில் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் கலந்து கொண்டார் மநீம தலைவர் கமலஹாசன் அவர்கள், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி -ஐ அவரது இல்லத்தில் சந்தித்தார்.
மக்கள் நலனுக்காகவும், தேச ஒற்றுமைக்காகவும், சக இந்தியனாக ‘பாரத் ஜோடோ யாத்திரையில்’ பங்கேற்றமைக்காக மநீம தலைவருக்கு நன்றி தெரிவித்தார் ராகுல்காந்தி. ஒரு மணி நேரத்திற்குமேல் நீடித்த உரையாடலின்போது, இந்திய அரசியல் சாசனத்துக்கு ஏற்பட்டுள்ள ஆபத்துகள், மக்களிடையே பிளவையும், வெறுப்பையும் பரப்பும் மதவாத அரசியலுக்கு மாற்றாக, ஒற்றுமை, அன்பை விதைக்கும் காந்திய அரசியலின் அவசியம் குறித்தான தங்களது கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
மேலும் விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பு மக்களின் நலனையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி, இளைஞர்களின் நலனைப் பாதுகாத்தல், கிராம சுயாட்சி, மொழித் திணிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் விவாதித்தனர் என மநீம ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பு மக்களின் நலனையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி, இளைஞர்களின் நலனைப் பாதுகாத்தல், கிராம சுயாட்சி, மொழித் திணிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் விவாதித்தனர்.
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) December 26, 2022