ஒற்றுமை யாத்திரை.! கன்னியாகுமரி வந்திறங்கினார் ராகுல் காந்தி.!
ஒற்றுமை யாத்திரை தொடங்குவதற்கு கன்னியாகுமரிக்கு வந்திறங்கினார் ராகுல் காந்தி.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் பாரத ஒற்றுமை யாத்திரை எனும் பெயரில் காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி பாதயாத்திரை செல்ல உள்ளார்.
தமிழகம், கேரளா, கர்நாடக என 12 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்களை இந்த பாதயாத்திரை மூலம் கடக்க உள்ளார். 3570 கிமீ தொலைவு பயணிக்க உள்ளார் ராகுல்காந்தி.
இந்த பாதயாத்திரை இன்று மாலை கன்னியாகுமரியில் தொடங்க உள்ளது. காலையில், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராகுல் காந்தி தந்தையும், மறைந்த முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி நினைவிடத்திற்கு சென்று வணங்கிவிட்டு ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி புறப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் தற்போது கன்னியாகுமரி வந்திறங்கியுள்ளார். இன்று மாலை முதல் பாதயாத்திரை தொடங்க உள்ளது.