நான் நிச்சயம் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும்.! ஆனால் அது கடினம்.! ஒற்றுமை யாத்திரையில் ராகுல் காந்தி ருசிகரம்.!
தமிழ் மொழியை நிச்சயம் நான் விரைவாக கற்று கொள்ள வேண்டும். தமிழ் மொழி அழகான மொழி. ஆனால், அதனை கற்று கொள்வது கொஞ்சம் கடினமாக இருக்கும் என நினைக்கிறேன் – ஒற்றுமை யாத்திரையில் ராகுல் காந்தி பேசினார்.
காங்கிரஸ் எம்.பியும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ராகுல் காந்தி தொடங்கியுள்ள பாரத ஒற்றுமை யாத்திரை இன்று 3ஆம் நாளாக தொடர்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த யாத்திரையில் திரளான காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் கலந்து கொண்டு வருகின்றனர்.
மேலும், செய்தியாளர்களுக்கும் பேட்டியளித்து கொண்டு செல்கிறார். அப்போது பேசுகையில், ‘தமிழ் மொழியை நிச்சயம் நான் விரைவாக கற்று கொள்ள வேண்டும். தமிழ் மொழி அழகான மொழி. ஆனால், அதனை கற்று கொள்வது கொஞ்சம் கடினமாக இருக்கும் என நினைக்கிறேன் ‘ என பேசியிருந்தார்.
மேலும் கூறுகையில், ‘ வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்து கொண்டு பாஜக அரசு செயல்படுகிறது.’ எனவும் தனது விமர்சனத்தை முன்வைத்தார் ராகுல் காந்தி.
இன்று மற்றும் நாளை கன்னியாகுமரியை கடந்து , வரும் 11ஆம் தேதி முதல் கேரளாவில் தனது பாரத ஒற்றுமை யாத்திரையை தொடர்வார் ராகுல் காந்தி என திட்டமிடப்பட்டுள்ளது.