வறுமைக்கு எதிராக ‘சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்’ நடத்த வேண்டும் என நான் விரும்புகிறேன் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இன்று (ஏப்ரல் 12 ஆம் தேதி) காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி தேர்தல் பிரசாரத்துக்காக தமிழகம் வந்துள்ளார்.இந்நிலையில் தேனீயில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.அப்போது அவர் பேசுகையில், தமிழக மக்களை அன்பால் தான் வெல்ல முடியும், வெறுப்பு அரசியலால் வெல்ல முடியாது.விவசாயிகள் போராட்டம் நடத்தும்போது பிரதமர் மோடி ஒருவார்த்தைக்கூட சொல்லவில்லை.
இந்தியா பல்வேறு மாநிலங்கள், கலாச்சாரங்களால் உருவானது .நாட்டில் ஏழ்மையை ஒழிக்க அதிரடி திட்டங்களை கொண்டுவர எண்ணி உள்ளேன், அதுதான் ஆண்டுக்கு ரூ.72,000 திட்டம் ஆகும்.
விவசாயத்திற்கு என்று தனி பட்ஜெட் கொண்டு வருவோம், விவசாய பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க நடவடிக்கை எடுப்போம். விவசாயிகளை பாதுகாக்க புதிய சட்டம் கொண்டு வரப்படும்.
கஜா புயலால் 8 மாவட்டங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, இதனால் 40 லட்சம் விவசாயிகள் வேலை இழந்துள்ளனர். திமுக – காங்கிரஸ் கூட்டணி, மக்களால் உருவான கூட்டணி ஆகும்.மத்திய அரசு பணிகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்குவோம்.தமிழகம் தமிழரால் ஆளப்படும். தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் வருவார்.காலியாக இருக்கும் லட்சக்கணக்கான மத்திய அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்.வறுமைக்கு எதிராக ‘சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்’ நடத்த வேண்டும் என நான் விரும்புகிறேன் என்று பேசினார்.
ஏலான் மஸ்க் எப்போதுமே தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் எதாவது பதிவு ஒன்றை வெளியிட்டு பயனர்களுடன் கலகலப்பாக பேசுவதை வழக்கமான…
டெல்லி : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதானி குழுமம் இந்திய அரசு அதிகாரிகளுக்கு…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு…
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், பிறந்தநாள் வரும் 27-ம்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச்-15ம் தேதி தொடங்கி, மே-25ம் தேதி நிறைவடையவுள்ளது. 2 மாதம்…
பெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை…