ராகுல் காந்திக்கு இன்னும் வயதாகவில்லை! மோடிக்கு தான் வயதாகிவிட்டது : திருநாவுக்கரசர்
காஞ்சிபுரத்தில், முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ராகுல் காந்தி பிரதமர் ஆனாலும், ஆகாவிட்டாலும் அதை பற்றி கவலையில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ராகுல் இந்த தேர்தலில் ஜெயிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, அவருக்கு இன்னும் வயதகவில்லை. இந்த தேர்தலில் ஜெயிக்கவில்லை என்றால் அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவார். ஆனால், மோடிக்கு வயதாகி விட்டது என தெரிவித்துள்ளார்.