ராகுல் காந்தி விவகாரம் – சட்டப்பேரவையில் பேச அனுமதி!
ராகுல் காந்தி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் பேச அனுமதி வழங்கினார் சபாநாயகர்.
தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் சபாநாயகர் ஆகியோருடன் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆலோசனை மேற்கொண்டனர். ராகுல் காந்தி பதவி நீக்கத்தை கண்டித்து சட்டப்பேரவை வளாகத்தில் போராட்டம் நடத்த இருந்த நிலையில், முதலமைச்சர், சபாநாயகருடன் ஆலோசனை நடத்தினர்.
இதன்பின், ராகுல் காந்தி விவகாரம் தொடர்பாக பேரவையில் நேரம் இல்லா நேரத்தில் பேச அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கறுப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்துள்ளனர். மேலும், சட்டப்பேரவையில், பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.