மோடியை எதிர்க்க ராகுல் காந்தி சரியான நபர் இல்லை,நடை பயிற்சியல் என்ன ஒற்றுமை வரும் ? -சீமான்
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமைப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.இன்றுடன் 4 வது நாளாக அவரது பயணம் தொடர்கிறது.
ராகுல் காந்தியின் பயணத்தை பற்றி விமர்சித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.இதுபற்றி அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில்,50 வருடத்தில் ஆண்டு ஏற்படுத்த முடியாத ஒற்றுமையை ஒருவர் 5 மாதங்கள் நடந்து எப்படி ஒற்றுமையை ஏற்படுத்த முடியும்.
இது வேடிக்கையாக இல்லையா என்றும் காலையும் ,மாலையும் அவர் மேற்கொள்வது நடை பயிற்சியே,இதில் என்ன தேச ஒற்றுமை இருக்கிறது என்றார்.
மோடியை நாங்களும் தான் எதிர்க்கிறோம் மோடியை எதிர்க்க ராகுல் காந்தி சரியான நபர் இல்லை என்றும் ,நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் தனிச்சே போட்டியிடுகிறோம் என்று சீமான் கூறினார்.