கன்னியாகுமரியில் நாளை நடை பயணத்தை தொடங்க உள்ளார் ராகுல்காந்தி!

Published by
பாலா கலியமூர்த்தி

கன்னியாகுமரியில் நாளை நடைபயணத்தை தொடங்க உள்ள நிலையில், இன்று மாலை சென்னை வருகிறார் ராகுல் காந்தி.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி 7-ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை 3,500 கிலோ மீட்டர் 150 நாட்கள் இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார். நாட்டில் நிலவும் விலைவாசி உயர்வு, பொருளாதார சீர்குலைவு, வேலையில்லாத் திண்டாட்டம், சாதி, மத பிரிவினைவாதம் போன்றவற்றைக் கண்டித்தும், ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கும் நோக்கில் இந்த பாதயாத்திரையை மேற்கொள்கிறார்.

தினமும் 20 கி.மீ. தூரம் பாதயாத்திரை மேற்கொள்ளும் ராகுல் காந்தியுடன் 118 பேர் செல்கின்றனர். இந்த பாதயாத்திரை 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசம் வழியாக காஷ்மீரில் முடிவடைகிறது. பாதயாத்திரையின்போது, ஒன்றுபடுவோம், ஒருங்கிணைவோம் என்ற கோஷத்துடன் பொது மக்களை சந்தித்து கலந்துரையாடுகிறார். அப்போது, மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத செயல்களை பொதுமக்களிடம் எடுத்துரைக்கிறார்.

இந்த நிலையில், கன்னியாகுமரியில் நாளை நடைபயணத்தை தொடங்க உள்ளார் ராகுல்காந்தி. அதற்காக, இன்று மாலை சென்னை வருகிறார் ராகுல்காந்தி. இதையொட்டி, சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாளை (புதன்கிழமை) காலை ஸ்ரீபெரும்புதூர் வரும் ராகுல் காந்தி, அங்கு ராஜீவ்காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார். இதன்பின் கன்னியாகுமரி சென்று தனது பாதயாத்திரியை தொடங்குகிறார். ராகுல் காந்தியின் புரட்சி பயணம் வெற்றி பெற முரசொலி நாளேடு வாழ்த்து தெரிவித்துள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

அன்புமணி vs ராமதாஸ் : “உனக்கு விருப்பம் இல்லைனா அவ்வளவு தான்”..மேடையில் நடந்தது என்ன?

அன்புமணி vs ராமதாஸ் : “உனக்கு விருப்பம் இல்லைனா அவ்வளவு தான்”..மேடையில் நடந்தது என்ன?

புதுச்சேரி : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று (டிசம்பர் 28) புதுச்சேரி நாவற்குளம் நெடுஞ்சாலையில்,…

18 minutes ago

நீ ஜெயிச்சிட்ட மாறா! சதம் விளாசிய நிதிஷ் குமார் ரெட்டி…கண்கலங்கிய தந்தை!

மெல்போர்ன் : சினிமா படத்தில் வரும்  "இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல இது நம்ப ஆட்டம்…

19 minutes ago

ஞானசேகரன் குறித்து மா. சுப்பிரமணியன் ஏன் விளக்கமளிக்கவில்லை? அண்ணாமலை கேள்வி!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில்  மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம்…

1 hour ago

ராமதாஸ் – அன்புமணி மோதல் : “எல்லாம் சரியாகிவிடும்”..எம்.எல்.ஏ.அருள் பேச்சு!

சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…

2 hours ago

தந்தை ராமதாஸ் உடன் வார்த்தை மோதல்! பனையூரில் தனி அலுவலகம் தொடங்கிய அன்புமணி!

விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…

3 hours ago

வன்கொடுமை விவகாரம்: மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு – சென்னை உயர்நீதிமன்றம் உத்தர

சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…

3 hours ago