ராகுல் காந்தி – சந்திரபாபு நாயுடு இணைந்து ஒன்றும் செய்ய முடியாது …!தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்
ராகுல் காந்தி – சந்திரபாபு நாயுடு இணைந்து ஒன்றும் செய்ய முடியாது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில்,22 மாநிலங்களில் நாங்கள் ஆட்சி செய்கிறோம். ஒரே மாநிலத்தில் ஆட்சியில் உள்ள சந்திரபாபு நாயுடு, ராகுலை சந்திப்பதால் அரசியல் மாற்றங்கள் ஏற்பட போவதில்லை. அதேபோல் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க நேரம் நிர்ணயம் செய்யக் கூடாது.மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்று தம்பிதுரை கூறுவது நியாயமல்ல என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.