ராகுல்காந்தி பிரதமராக முடியாது.. மம்தா பிரதமராக்கட்டும்.! சீமான் கருத்து.!
ராகுல்காந்தி பிரதமராக முடியாது. மம்தா, சந்திரபாபு போன்றோர் பிரதமராக வரட்டும் என சீமான் கருத்து தெரிவித்துள்ளார் .
திருநெல்வேலி மாவட்டம் மானூரில் நாம் தமிழர் கட்சி விழாவில் அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறும் போது பல்வேறு அரசியல் கருத்துக்களை குறிப்பிட்டார்.
அவர் கூறுகையில், மதுவிலக்கு என்று கூறி வந்த பாமக நிறுவனர் ராமதாஸ், அதிமுக, திமுக கூட்டணியில் சேர்ந்துள்ளார். அதேபோல் தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் மக்களுக்காக போராடுவதில்லை. அவர்கள் திமுகவில் சரணடைந்து விட்டனர் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், ராகுல்காந்தி நிச்சயமாக பிரதமராக முடியாது. மாநில பிரதிநிதிகளாக இருக்கும் மம்தா பேனர்ஜி, சந்திரபாபு நாயுடு போன்றவர்கள் பிரதமராக உயர வேண்டும். அதுதான் நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் எனவும் குறிப்பிட்டார்.
நடிகர் விஜய் அரசியல் வருவதை பற்றி கேட்கும்போது, ‘ அவர் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம்.’ என்றும் சீமான் குறிப்பிட்டார்.