தமிழகத்தில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரம் செய்யத் தடை விதிக்கக் கோரி தேர்தல் ஆணையத்திற்கு பாஜக கடிதம் எழுதியுள்ளது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் பரப்புரைக்காக 3 நாள் பயணமாக டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் திருவனந்தபுரம் சென்று, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி வந்தார்.
அப்போது, ராகுல் காந்தி கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறி ராகுல் காந்தி நடப்பதாகக் கூறி தேர்தல் ஆணையத்தில் தமிழக பாஜக தலைவர் எல். முருகன் புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகாரில், சுதந்திரபோராட்ட வீரர்களை மதிக்காததது போன்ற பல்வேறு குற்றசாட்டை முன்வைத்து புகார் கொடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் விதிகளை மீறியதற்காக ராகுல் காந்தி மீது முதல் தகவல் அறிக்கையை பதிய உத்தரவிடக் கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறியதால் வரக்கூடிய பரப்புரைகளில் அவரை அனுமதிக்கக்கூடாது என எல். முருகன் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…
டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணியும் ராஜஸ்தான் அணியும்மோதியது . இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை…