#BREAKING: தூத்துக்குடி நீதிபதி முன் ரகு கணேஷ் ஆஜர்.!
தூத்துக்குடி மாவட்ட நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட உதவி ஆய்வாளர் ரகு கணேஷ்.
சாத்தான்குளத்தை சார்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் வழக்கு தொடர்பான விசாரணையை நேற்று காலை சிபிசிஐடி தொடங்கியது. தொடர்ந்து விசாரணை நடந்து வந்த நிலையில், நேற்று இரவு சி.பி.சி.ஐ.டி தந்தை, மகன் இறந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்தது.
இந்த வழக்கு தொடர்பாக, எஸ்.ஐ. ரகு கணேஷை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்தனர். பின்னர், கைது செய்யப்பட்ட ரகு கணேஷை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, தூத்துக்குடி மாவட்ட நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார்.